Search This Blog

Friday, December 18, 2009

அன்னிபெசன்ட் அம்மையார்

இராணுவம், விண்வெளி, போக்குவரத்து என்று கடினமானத் துறைகளில் கூட இன்று பெண்கள் பல சாதனைகளை படைத்து வருகிறார்கள். ஆனால் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே அயர்லாந்து பெண்மணி ஒருவர் இந்தியாவால் ஈர்க்கப்பட்டு அங்கு வந்து இந்தியராகவே வாழ்ந்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.

அவர்தான் அன்னிபெசன்ட் அம்மையார் ஆவார். அவர் தனது 46 வது வயதில் இந்தியா வந்து, ஈடுபட்ட நான்கு துறைகள்: மதம், மதத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வி, சமூகசீர்திருத்தம், அரசியல்.1898_ல் காசியில் அவர் துவக்கிய மத்திய ஹிந்து கல்லூரிக்கு காசி மன்னர் மனை வழங்கினார். 1904_ல் பெண்கள் பள்ளியைத் துவக்கினார்.

சென்னை அடையாறு உள்பட நாடெங்கும் பல ஊர்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பள்ளிகளை ஆரம்பித்தார்.பிரம்மஞான சபையைச் சேர்ந்தவர்கள் (பிரம்மஞானிகள்), ‘ஜாதி வேறுபாடு பார்க்க மாட்டேன். பெண் குழந்தைக்கும் மனைவிக்கும் கல்வி போதிப்பேன். பெண்களுக்கு 21 வயதுக்குள் திருமணம் செய்துவைக்கமாட்டேன். விதவை மறுமணத்தை ஆதரிப்பேன்’ ஆகிய விதிகளை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனைவிதித்தார்.

அதுமட்டுமல்ல இந்தியாவுக்கு பிரிட்டிஷ் காமன்வெல்த்துக்குள் சுயாட்சி வேண்டும் என்று கிளர்ச்சி நடத்தினார். அதற்காக ‘ஹோம் ரூல் லீக்’ என்ற இயக்கத்தைத் தொடங்கி, தனது ஆங்கில நாளேடு ‘நியூ இந்தியா’வில் காரசாரமாக எழுதி ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார். சமூகம், ஆன்மிகம், தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதத்தில் பல்வேறு சேவைகளையும் செய்துள்ளார்.

Wednesday, December 9, 2009